/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடம் தினமலர் செய்தி எதிரொலி

ADDED : ஜூலை 10, 2025 11:28 PM

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்டுமான பணிக்காக பழைய கட்டடம் இடிக்கும் பணி துவங்கியது.
நடுவீரப்பட்டில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. சுற்று பகுதியை சேர்ந்த ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் தினமும் நுாற்றுக்கணக்கில் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் இதன் அருகில் தனி கட்டடத்தில் இயங்கும் 24 மணிநேர பிரசவம் பார்க்கும் வசதி உள்ளதால் பல கர்ப்பிணி தாய்மார்கள் தினமும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
சுகாதார நிலையத்தின் பிரதான கட்டடம் பழுதடைந்ததால், பொது மருத்துவம், கண்,பல், காது, மகளிர் மருத்துவம், லேப் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளும் தனி கட்டத்தில் இயங்கும் பிரசவம் பார்க்கும் வார்டில் இயங்கி வருவதால் நெருக்கடி ஏற்படுகிறது.
இதனால், நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் சிரமத்திற்கு ஆளாவதாக 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து சுகாதார நிலையத்தில் புதிய கட்டடம் கட்டுமான பணிக்காக பழைய கட்டடம் இடிக்கும் பணி நடந்து வருகிறது.