/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ.55.27 லட்சத்தில் புதிய கட்டடங்கள் நெய்வேலியில் எம்.எல்.ஏ., திறப்பு

ADDED : பிப் 17, 2024 11:53 PM

நெய்வேலி: நெய்வேலியில் ரூ. 55. 27 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
நெய்வேலி இந்திரா நகர் ஊராட்சிக்குட்பட்ட பாரதி நகரில் 14.30 லட்சம் ரூபாய் மதிப்பில் அங்கன்வாடி மையம், எம்.ஆர்.கே., சாலையில் ரூ.14.50 லட்சத்தில் ரேஷன் கடை கட்டப்பட்டது. இவற்றை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., நேற்று திறந்து வைத்தார்.
தொடர்ந்து வடக்குத்து ஊராட்சி, பெரியசாமி நகரில் 14.50 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடை மற்றும் மேல் வடக்குத்து கிராமத்தில் 11.97 லட்சத்தில் கட்டிய அங்கன்வாடி கட்டடத்தை எம்.எல்.ஏ., திறந்து வைத்தார். ரேஷன் கடைகளை திறந்து வைத்து, முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய அவைத் தலைவர் வீரராமச்சந்திரன், செயலாளர் குணசேகரன், பொருளாளர் ஆனந்த ஜோதி, துணை செயலாளர் ஏழுமலை, ஊராட்சி தலைவர்கள் அஞ்சலை குப்புசாமி, ராஜலட்சுமி கிருஷ்ணமூர்த்தி, குறிஞ்சிப்பாடி டி.எஸ்.ஓ., கிருஷ்ணா, ஊராட்சி துணைத் தலைவர்கள் சடையப்பன், உமா ராமதாஸ், குழந்தைகள் நல அலுவலர் பவானி, டாக்டர் மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.