ADDED : ஜன 12, 2026 03:04 AM

சிதம்பரம்: சிதம்பரம் அருகே 10 லட்சம் மதிப்பில் பயணியர் நிழற்குடையை எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
லால்புரம் ஊராட்சிக்குட்பட்ட, மணலுாரில் அரசு போக்குவரத்து பணிமனை எதிரில் இருந்த பஸ் நிறுத்த கட்டடம், பழுதடைந்தது. இது குறித்து, பொதுமக்கள் மற்றும் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கையை தொடர்ந்து, தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, ரூ.10 லட்சத்தை பாண்டியன் எம்.எல்.ஏ., ஒதுக்கீடு செய்தார்.
புதிய பஸ் நிறுத்தம் கட்டுமான பணிகள் நிறைவு பெற்று, திறப்பு விழா நேற்று நடந்தது.
இதில், பாண்டியன் எம்.எல்.ஏ., பஸ் நிறுத்த புதிய கட்டடத்தை திறந்து வைத்து, அதன் அருகிலேயே மரக்கன்றுகள் நட்டு துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் ரங்கசாமி, மாவட்ட இணை செயலாளர் ரெங்கம்மாள், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் சந்திரசேகர், துணை செயலாளர் பூபதி ரவிக்குமார், சிதம்பரம் மாவட்ட இணை செயலாளர் சிதம்பரம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் லதா ராஜேந்திரன், நிர்வாகிகள் ஜானிகிராமன், செழியன், ராஜேந்திரன், ரமேஷ், கண்ணன், அன்பரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

