/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஓயாசிஸ் மாற்றுத்திறனாளி பள்ளியில் புத்தாடை வழங்கல்
/
ஓயாசிஸ் மாற்றுத்திறனாளி பள்ளியில் புத்தாடை வழங்கல்
ஓயாசிஸ் மாற்றுத்திறனாளி பள்ளியில் புத்தாடை வழங்கல்
ஓயாசிஸ் மாற்றுத்திறனாளி பள்ளியில் புத்தாடை வழங்கல்
ADDED : அக் 18, 2025 07:15 AM

கடலுார்: கடலுாரில் ஓயாசிஸ் மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு புத்தாடை, அறுசுவை விருந்தளித்து எம்.எல்.ஏ., ஏற்பாட்டில் தீபாவளி கொண்டாடி மகிழ்ந்தனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடலுார் அய்யப்பன் எம்.எல். ஏ.,ஏற்பாட்டில் ஓயாசிஸ் ஆதரவற்றோர் இல்லத்தில் வசிக்கும் 300 குழந்தைகளுக்கு, டாக்டர் பிரவீன் அய்யப்பன் புத்தாடைகளை வழங்கினார். தொடர்ந்து தனியார் உணவகத்தில் அறுசுவை விருந்து உண்டு மகிழ்ந்தனர்.
பின்னர் ஆதரவற்ற இல்லம் அமைந்துள்ள பகுதியில் வண்ண வானவேடிக்கைகளுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.
நிகழ்வில் சுமங்கலி சில்க்ஸ் நிஸ்தர் அலி, ஓயாசிஸ் மாற்றுத்திறனாளிகள் பள்ளி நிர்வாகத்தினர் உட்பட பலர் பங்கேற்றனர்.