/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முதல்வருக்காக காத்திருக்கும் புதிய சுகாதார நிலையம்
/
முதல்வருக்காக காத்திருக்கும் புதிய சுகாதார நிலையம்
முதல்வருக்காக காத்திருக்கும் புதிய சுகாதார நிலையம்
முதல்வருக்காக காத்திருக்கும் புதிய சுகாதார நிலையம்
ADDED : நவ 30, 2024 04:36 AM

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் தமிழக முதல்வர் திறந்து வைப்பதற்காக ஆரம்ப சுகாதார நிலையங்கள் காத்திருக்கின்றன.
கடலுார் மாவட்டத்தில் நெல்லிக்குப்பம்,பண்ருட்டி உட்பட 5 இடங்களில் சார் பதிவாளர் அலுவலகங்கள் பல கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டன.ஆனால் பணிகள் முடிந்தும் தமிழக முதல்வர் திறந்து வைப்பதற்காக இரண்டு மாதங்களுக்கு மேல் காத்திருந்தன.கடந்த வாரம் தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.நெல்லிக்குப்பம் அண்ணாநகர்,முள்ளிகிராம்பட்டு ஆகிய இடங்களில் தலா ரூ.25 லட்சம் செலவில் புதியதாக நகர ஆரம்ப சுகாதார நிலையங்கள் கட்டப்பட்டு பணி முடிந்து 3 மாதங்களுக்கு மேலாகிறது.
இதேபோல் பல நகராட்சிகளிலும் கட்டப்பட்டுள்ளன கட்டடங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பார் என சொல்கின்றனர். இதனால் இவை மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் பாழாகி வருகிறது.இவற்றை திறக்க சுகாதாரத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.