/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இடிக்கப்பட்ட வீடுகளுக்கு புதிய வீடு சிதம்பரம் மா.கம்யூ., வலியுறுத்தல்

ADDED : நவ 04, 2024 05:43 AM

சிதம்பரம், : சிதம்பரத்தில் நீர்நிலைகளில் இருந்த வீடுகள் அகற்றப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய வீடுகள் கட்டிக்கொடுக்கவேண்டும் என மா.கம்யூ., மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சிதம்பரம் தெற்கு வீதியில், மா.கம்யூ., கட்சியின் சிதம்பரம் நகர 20-வது மாநாடு நடந்தது. முன்னாள் மாநில குழு உறுப்பினர் மூசா மாநாட்டு கொடியேற்றி வைத்தார். நகர்குழு உறுப்பினர் குமரவேல் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார்.
நகர்மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன் வரவேற்றார். தலைமை குழுவாக நகர் குழு உறுப்பினர்கள் கலியமூர்த்தி, மல்லிகா, குமரவேல் செயல்பட்டனர். மாநாட்டை மாவட்ட செயலாளர் மாதவன் துவக்கி வைத்து பேசினார்.
வேலை அறிக்கையை நகர செயலாளர் ராஜா சமர்பித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கருப்பையா, தேன்மொழி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். கட்சியின் மாநில குழு உறுப்பினர் ரமேஷ்பாபு மாநாட்டு நிறைவுறையாற்றினார்.
மாவட்ட குழு உறுப்பினர் ஜெயசித்ரா நன்றி கூறினார்.
நகராட்சியில் இடிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்று இடத்தில் வீடு கட்டி கொடுக்கவேண்டும். மனை பட்டா இல்லாதவர்களுக்கு மனை பட்டா வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.