ADDED : டிச 16, 2025 05:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் முதுநகரில் வடலுார் நியூ கிருஷ்ணா பேக்கரி மற்றும் ஸ்வீட்ஸ் கடை திறப்பு விழா நடந்தது.
விழாவிற்கு வள்ளலார் வர்த்தகர் சங்க செயலாளர் தனசேகரன் தலைமை தாங்கினார். விழாவில் கடலுார் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் துரைராஜ் கடையை திறந்து வைத்து, முதல் விற்பனையை துவக்கி வைத்தார். வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சதீஷ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
விழாவில் துணைத்தலைவர் சந்திரகாசன், செயலாளர் ஞானசேகரன், நகர பிரமுகர்கள் அன்பு, ராஜேந்தின் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். டாக்டர் சரண்ராஜ் நன்றி கூறினார்.

