/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சைவத் திருமுறை பயிற்சி நிறைவு விழா
/
சைவத் திருமுறை பயிற்சி நிறைவு விழா
ADDED : டிச 16, 2025 05:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடலுார்: வடலுாரில் சைவத்திருமுறை நேர்முகப் பயிற்சி நிறைவு விழா நடந்தது
திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீன சைவத்திருமுறை நேர்முகப் பயிற்சி மையம் சார்பில், சைவத்திருமுறை பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியின் நிறைவு விழா நேற்று நடந்தது. மைய அமைப்பாளர் ஜெயபால், துணை அமைப்பாளர் கனகசபை, மைய பேராசிரியர் தியாகராஜன், ஓதுவார் ராஜபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு திருமுறை பேராசிரியர் ராஜன், நெய்வேலி திருமுறை அமைப்பாளர் சோமஸ்கந்தன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். நிகழ்வில் திருமுறை பயிற்சி மாணவர்கள், தன்னார்வலர்கள், சைவ சமய ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

