
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் உள்ள குழந்தை சுவாமி சித்தருக்கு நேற்று கார்த்திகை மாத அமாவாசை சிறப்பு பூஜை நடந்தது. பூஜையை முன்னிட்டு காலை கணபதிஹோமமும், தொடர்ந்து மகா அபிஷேகமும் நடந்தது.
மதியம் 12:30 மணிக்கு மகா பூர்ணாஹூதி நடந்து, யாகத்தில் வைக்கப்பட்ட கலசம் உலா வந்து குழந்தை சுவாமி சித்தருக்கு கலச அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தது. அதேபோல, நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவிலில் உள்ள பச்சைகேந்திரசுவாமி சித்தருக்கு சிறப்பு பூஜை நடந்தது.

