ADDED : மே 12, 2025 12:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணத்தில் தேரோடும் வீதியில் புதிய மின்வழித்தடங்கள் மற்றும் புதிய மின் மாற்றி துவக்க விழா நடந்தது.
சிதம்பரம் செயற்பொறியாளர் ஜெயந்தி தலைமை தாங்கி புதிய மின்மாற்றியை இயக்கி வைத்தார். பேரூராட்சி சேர்மன் செல்வி ஆனந்தன், ஒன்றிய செயலாளர் தங்க ஆனந்தன், த.வீ.செ. கல்வி நிறுவனங்களின் செயலர் செந்தில்நாதன், தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் செங்கோல், ஸ்ரீமுஷ்ணம் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் ஜெயபிரகாஷ், உதவி மின் பொறியாளர்கள் வேல்முருகன், சீதாராமன், உதவி மின்பொறியாளர் வேல்முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.