/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் புதிய திட்ட பணிகள்: அமைச்சர் பன்னீர்செல்வம் அடிக்கல்
/
கடலுாரில் புதிய திட்ட பணிகள்: அமைச்சர் பன்னீர்செல்வம் அடிக்கல்
கடலுாரில் புதிய திட்ட பணிகள்: அமைச்சர் பன்னீர்செல்வம் அடிக்கல்
கடலுாரில் புதிய திட்ட பணிகள்: அமைச்சர் பன்னீர்செல்வம் அடிக்கல்
ADDED : ஆக 05, 2025 01:58 AM

கடலுார்: கடலுாரில் புதிய திட்டப் பணிகளுக்கு அமைச்சர் பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார்.
கடலுார் மாநகராட்சியில் புதிய திட்டப் பணிகளுக்கு நடந்த அடிக்கல் நாட்டு விழாவில், கலெக் டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். அய்யப்பன் எம்.எல்.ஏ., துணை மேயர் தாமரைச்செல்வன் முன்னிலை வகித்தனர். அமைச்சர் பன்னீர்செல்வம், கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
பின், அவர் கூறியதாவது:
பொதுமக்களின் உடல் நலத்தை காக்கும் வகையில், முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. முகாமில் நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மனநல பாதிப்புடையோர், இதய நோயாளிகள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறன் கொண்டவர்கள், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் 40 வயதிற்கு மேற்பட்டோர் ஆகியோரை இலக்காகக் கொண்டு உயர்மருத்துவ சேவை வழங்கப்படுகிறது.
கடலுார் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள பல்நோக்கு சுகாதார செவிலியர் பயிற்சிப் பள்ளி மாணவிகளுகு்கு 8.58 கோடி ரூபாய் மதிப்பில் 1726.99 சதுரடி அளவில் தங்கும் விடுதி கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
பழைய கலெக்டர் அலுவலகம் கடந்த 1897ம் ஆண்டு 44,960 சதுரடி அளவில் கட்டப்பட்டுள்ளது. இது 100 ஆண்டுகள் கடந்த பழமை வாய்ந்த கட்டடமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதன் தொன்மை மாறாமல் 16.20 கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட உள்ளன.
முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பின்படி, மஞ்சக்குப்பம் மைதானத்தில் 14.15 கோடி ரூபாய் மதிப்பில் 77 கடைகள், கன்வென்ஷன் சென்டர், நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதைகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்தும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
முதன்மை கல்வி அலுவலகம் எதிரே ஆய்வு மாளிகை 6 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு வசதிகளுடன் கூடிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில், மாநகராட்சி கமிஷனர் அனு, கவுன்சிலர்கள், மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் மணிமேகலை, டாக்டர் கண்ணன், செயற் பொறியாளர் சிவசங்கரநாயகி, உதவி செயற் பொறியாளர்கள் பிரவின்குமார், மோகன்ராஜ், அருள், உதவி பொறியாளர் காவியநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

