தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/புதிய சாலை 'டேமேஜ்' ஒப்பந்ததாரர் சிறைபிடிப்பு

புதிய சாலை 'டேமேஜ்' ஒப்பந்ததாரர் சிறைபிடிப்பு

புதிய சாலை 'டேமேஜ்' ஒப்பந்ததாரர் சிறைபிடிப்பு


ADDED : பிப் 21, 2024 08:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2024 08:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புவனகிரி அருகே கீரப்பாளையம் ஒன்றியம், பெருங்காலூர் கிராமத்தில் மெயின் ரோடு இணைப்பு சாலை 36 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டது. இந்த தார்சாலை, சில மாதங்களில் சேதம் அடைந்ததால் அப்பகுதியினர் மீது கடும் அதிருப்தியில் இருந்து வந்தனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு, அந்த சாலையை போட்ட ஒப்பந்ததாரர் வேறு வேலை காரணமாக வந்தார். இதையறிந்த அப்பகுதியினர் அவரை சிறைபிடித்து, கேள்வி கணைகளால் தொடுத்தனர். இதனால் ஒப்பந்ததாரருக்கும், பொதுமக்களுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது.

தகவலறிந்த புத்துார் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, ஒப்பந்ததாரை அங்கிருந்து மீட்டு சென்றனர். பிரச்னையின்போது, ' மேலிருந்து கீழ் மட்டம் வரை கொட்டினால் எப்படி தரமாக சாலை அமைக்க முடியும் என, ஒப்பந்ததாரரின் வாய் ஜாலத்தை அப்பகுதியினர், மொபைல் போனில் ரெக்கார்டு செய்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us