/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புதிய பள்ளி கட்டடம்: எம்.எல்.ஏ., திறப்பு
/
புதிய பள்ளி கட்டடம்: எம்.எல்.ஏ., திறப்பு
ADDED : அக் 19, 2024 04:53 AM

நெய்வேலி : புதிய பள்ளி கட்டடத்தை எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
காடாம்புலியூரில் ஆதிதிராவிடர் நலத்துறை ஆரம்ப பள்ளி உள்ளது. இப்பள்ளியில் போதிய கட்டட வசதி இல்லாமல் மாணவர்கள் அவதியடைந்து வந்தனர். அதனையொட்டி, இரு கூடுதல் கட்டடம் கட்ட சபா. ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.21 லட்சம் ஒதுக்கீடு செய்தார்.
கட்டி முடிக்கப்பட்ட புதிய வகுப்பறை கட்டடத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது.
பண்ருட்டி ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன் தலைமை தாங்கினார். பி.டி.ஓ., சங்கர் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் சுந்தரி வரவேற்றார். புதிய கட்டடங்களை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
தி.மு.க., ஒன்றிய நிர்வாகிகள் ராஜா, ஆடலரசு ,செல்வகுமார், ஊராட்சி தலைவர் பூவராகவன், கிளை செயலாளர் குமார், பிரகாஷ், சதானந்தம், சங்கரன், ஜோதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.