/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புவனகிரி சர்ச்சில் புத்தாண்டு கொண்டாட்டம்
/
புவனகிரி சர்ச்சில் புத்தாண்டு கொண்டாட்டம்
ADDED : ஜன 02, 2025 06:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி; புவனகிரி பவர் ஆப் ஜீசஸ் ஏ.ஜி.சர்ச் மற்றும் உளுத்துார் புனித அன்னம்மாள் ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது.
புவனகிரி சித்தேரி சாலையில் பவர் ஆப் ஜீசஸ் ஏ.ஜி.சர்ச்சில் பங்குத்தந்தை சாலமோன் சாமுவேல் ஜேக்கப், உளுத்துார் புனித அன்னம்மாள் தேவாலயத்தில் பங்குத்தந்தை ஜெபஸ்டின் ஆகியோர் தலைமையில், புத்தாண்டு விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு சிறப்பு ஆராதனை நிகழ்ச்சி நடந்தது.
பின்னர் இன்னிசையுடன் கிறிஸ்துமஸ் பாடல்கள் இசைக்கப்பட்டது. தொடர்ந்து சிறுவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

