/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
துாய்மை பணியாளர்களுக்கு புத்தாடை, இனிப்புகள் வழங்கல்
/
துாய்மை பணியாளர்களுக்கு புத்தாடை, இனிப்புகள் வழங்கல்
துாய்மை பணியாளர்களுக்கு புத்தாடை, இனிப்புகள் வழங்கல்
துாய்மை பணியாளர்களுக்கு புத்தாடை, இனிப்புகள் வழங்கல்
ADDED : அக் 18, 2025 12:03 AM

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று தீபாவளி பண்டிகை யையொட்டி, துாய்மை பணியாளர்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
சேர்மன் தேன்மொழி சங்கர் தலைமை தாங்கி, துாய்மை பணியாளர்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கினார். துணை சேர்மன் முகமது யூனுஸ், தி.மு.க., மாவட்ட பிரதிநிதி சங்கர், முன்னாள் துணை சேர்மன் செழியன் முன்னிலை வைத்தனர்.
விழாவில், வர்த்தக சங்க தலைவர் ஆனந்தன், மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் அரவிந்தன், நகர அவைத் தலைவர் தங்கவேல், கவுன்சிலர் ரொகையமா குன்முகமது, துப்புரவு மேற்பார்வையாளர் வீர ஆனந்தன் உட்பட பங்கேற்றனர். கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் செல்வகுமார், நன்றி கூறினார்.