UPDATED : அக் 16, 2026 10:49 PM
ADDED : அக் 16, 2026 10:46 PM

அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: கடலுார் மாவட்டம், ரெட்டிச்சாவடியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார், 27. டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவருக்கு ஒரு மாதத்திற்கு முன் திருமணமானது.
புதுச்சேரி, வாணரப்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி பாம் ரவி, 2021ல் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், முக்கிய குற்றவாளியான பிரவீன்குமாருக்கு, எதிர் தரப்பினருடன் முன்விரோதம் இருந்தது.
பிரவீன்குமார் நேற்று மாலை பைக்கில் சென்ற போது, காரில் வந்த 4 பேர் கும்பல், பிரவீன்குமாரை சரமாரியாக வெட்டி கொலை செய்து தப்பியது.
தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
