/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புதியதாக 39 மழைமானி மாவட்டத்தில் அமைப்பு
/
புதியதாக 39 மழைமானி மாவட்டத்தில் அமைப்பு
ADDED : பிப் 18, 2024 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் புதியதாக 39 மழைமானிகள் அமைக்கப்படுகிறது.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
தமிழகம் முழுவதும் காலநிலை மற்றும் மழை அளவை துள்ளியமாக கண்காணிக்க அனைத்து மாவட்டங்களிலும், தேவையான இடங்களில் தானியங்கி வானிலை மையம் மற்றும் தானியங்கி மழைமானி அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்பேரில், சென்னை பேரிடர் மேலாண்மை இயக்குனர் அறிவுறுத்தலின்படி, கடலுார் மாவட்டத்தில் 39 தானியங்கி மழைமானிகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகள் விரைவில் முடிந்து, 39 தானியங்கி மழைமானிகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும்.