/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இணைவு கல்லுாரிகளுக்கு இணையதளம் துவக்கம்
/
இணைவு கல்லுாரிகளுக்கு இணையதளம் துவக்கம்
ADDED : ஜன 28, 2022 03:56 AM
சிதம்பரம் -சிதம்பரம் அண்ணாமலை பல்கலை., இணைவுக் கல்லுாரிகளுக்கான புதிய இணைய தளத்தை துணைவேந்தர் கதிரேசன் துவக்கி வைத்தார்.கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக இணைப்பு கல்லுாரிகளுக்காக www.aucoeexam.in என்ற இணைய தள துவக்க விழா நேற்று நடந்தது.
இப்புதிய இணைய தளத்தை தேர்வுத் துறை தொழில்நுட்ப அலுவலர்கள் கிருஷ்ணகுமார், அருணாராணி, விக்ரமநாராயணன் ஆகியோர் உருவாக்கினர். அண்ணாமலை பல்கலை.,யின் கீழ் இயங்கும் கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள 75 இணைப்புக் கல்லுாரிகளுக்கான இணைய தளமாகும்.பல்கலை., துணைவேந்தர் கதிரேசன் தலைமை தாங்கி புதிய இணைய தளத்தை துவக்கி வைத்தார். பதிவாளர் சீதாராமன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ், கல்லுாரி வளர்ச்சி கவுன்சில் முதல்வர் வசந்தராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழா ஏற்பாடுகளை பேராசிரியர் ராஜேந்திரன், பிரபாகரன், பேராசிரியர் சக்திவேல், மோகன்குமார், சுதாகர், முல்லை மாறன் ஆகியோர் செய்திருந்தனர்.இதன் மூலம் கல்லுாரிகள் தகவல்கள் பதிவேற்றம், செய்முறை மதிப்பெண்களுக்கான உரிய படிவம் சமர்ப்பிப்பு, ஹால் டிக்ெகட் அனுமதி பெறுவது, தேர்வு முடிவுகள் தெரிந்து கொள்ளலாம். மேலும் புதிய இணையதளம் இணைய வழியில் தேர்வுகள் நடத்த உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.