/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அக்ஷரா வித்யாஷ்ரமில் நெக்சஸ் விழா
/
அக்ஷரா வித்யாஷ்ரமில் நெக்சஸ் விழா
ADDED : டிச 20, 2024 11:23 PM

கடலுார்: கடலுார் அக்ஷரா வித்யாஷ்ரம் பள்ளியில் இளம் தொழில்முனைவோர் மற்றும் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் அக்ஷரா நெக்சஸ் விழா நடந்தது.
விழாவில் மாணவர்கள் உருவாக்கிய தொழில் திட்டங்கள் மற்றும் கைவினை பொருட்கள் காட்சி படுத்தப்பட்டன. இதில் தொழில்முனைவோர், முதலீட்டாளர், நிலைத்தன்மை ஆதரவாளர் மற்றும் புதுச்சேரி டைடி ரேபிட் மேலாண்மை நிறுவனத்தின் நிறுவனர் ஜொனாதென் சார்லஸ், கான்ஷியல் ஸ்பேசஸ் நிறுவன நிறுவனர் விசாலாட்சி லோகநாதன், வாழ்க்கைமுறை பயிற்சியாளர் ஸ்மிர்தி ராஜ் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றனர்.
அக்ஷரா வித்யாஷ்ரம் நிறுவன நிறுவனர் விஜயலஷ்மி, நீல் ஈகோ லிவிங் நிறுவன நிறுவனர் அஷ்வினி ரமணிசங்கர், அக்ஷரா வித்யாஷ்ரம் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி பவித்ரா ரமணிசங்கர் ஆகியோர் உடனிருந்தனர். காட்டுக்குப்பம் பி.எஸ்.பி.பி., சிதம்பரம் எடிசன், கடலுார் கே.வி.என்.,உட்பட பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். இளம் எழுத்தாளர்களை உருவாக்கும் விழா மற்றும் புத்தக வெளியீட்டு விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக சென்னை சன்னிசைட் எக்ஸ்பரிமன்டல் லேனிங் சென்டர் மையத்தின் நிறுவனர் சபினா பாத்திமா, கவிஞர் பிருந்தா பங்கேற்றனர்.