/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெய்வேலி பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது
/
நெய்வேலி பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது
ADDED : டிச 10, 2024 06:19 AM

நெய்வேலி; நெய்வேலியில் ரவுடி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
நெய்வேலி அடுத்த கீழ் வடக்குத்து கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி மகன் மதிவதனன். 28; தனியார் நிறுவன டிரைவர். இவர் நேற்று, இந்திரா நகர் மாற்றுக்குடியிருப்பு வழியாக பைக்கில் சென்றார்.
அப்போது, மேல்வடக்குத்து சடா முனீஸ்வரர் கோவில் தெருவை சேர்ந்த வெங்கடேசன் மகன் வீரமணி, 26; என்பவர், மதிவதனனை முன்விரோதம் காரணமாக வழிமறித்து கத்தியால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மதிவதனன் கொடுத்த புகாரின்பேரில் நெய்வேலி டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் சுதாகர் வழக்கு பதிந்து வீரமணியை கைது செய்தார்.
இவர் மீது கொலை முயற்சி, அடிதடி வழக்குகள் உள்ளன. ரவுடியான இவரது குற்றச்செயலை தடுக்கும் பொருட்டு எஸ்.பி., ராஜாராம் பரிந்துரையின்பேரில், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், வீரமணியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
நேற்று வீரமணி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.