
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம : நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் சப்த கன்னிகள் அருள்பாலித்து வருகின்றனர். இங்கு வராஹி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது.
தேய்பிறை பஞ்சமி நாளில் வராஹி அம்மனை வழிபட திரளான பக்தர்கள் வருகை தருகின்றனர். அந்த வகையில் நேற்று தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு யாகம் நடந்தது.
அம்மனுக்கு நிகும்பலா யாகம் நடத்தி தீபாராதனை காண்பிக்கப்பட்டது. வராஹி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோவிலை வலம் வந்து அருள்பாலித்தார்.

