ADDED : ஏப் 28, 2025 10:22 PM

அ நிறம் | அளவு
நடுவீரப்பட்டு:
நடுவீரப்பட்டு பிரத்தியங்கராதேவி கோவிலில் நிகும்பலா யாகம் நடந்தது.
நடுவீரப்பட்டு பிரத்தியங்கராதேவி கோவிலில் சித்திரை மாத அமாவாசையொட்டி மண்டபத்தில் யாகவேள்விகள் துவங்கப்பட்டது. தொடர்ந்து, யாகவேள்வியில் மிளகாய்வற்றல் கொட்டப்பட்டு நிகும்பலா யாகம் நடந்தது.
மகா பூர்ணாஹூதி நடந்து, யாகத்தில் வைக்கப்பட்ட கலசம் ஆலய உலாவாக வந்து சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. பாதாள காளிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி அறிவழகன் குருக்கள் செய்திருந்தார். சிறப்பு விருந்தினராக ஈஸ்வரராஜலிங்கம் சுவாமிகள் பங்கேற்றார்.
