/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பூலோகநாதர் கோவிலில் நிவர்த்தி ஹோமம்
/
பூலோகநாதர் கோவிலில் நிவர்த்தி ஹோமம்
ADDED : மே 30, 2025 05:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் அக்னி நட்சத்திரம் நிவர்த்தி ஹோமம் நடந்தது.
நெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில் அக்னி நட்சத்திரம் நிவர்த்தி பூஜைகள் நடந்தது.108 கலசங்களில் புனிதநீர் நிரப்பி சிறப்பு யாகம் நடந்தது. வெயிலின் தாக்கத்தை குறைக்க பூலோகநாதருக்கு கலசாபிஷேகம் நடத்தினர்.
சிறப்பு அலங்காரத்தில் பூலோகநாதர் அருள்பாலித்தார். பூலோகநாதரை குளிர்விக்க தொடர்ந்து சுவாமி தண்ணீர் சொட்டும் படி தாராபிஷேக பாத்திரம் பொறுத்தினர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பூஜைகளை ஹரிபிரபு, முருகானந்தம் குருக்கள் செய்தனர்.