/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நீட் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு கல்வி கட்டணம்; என்.எல்.சி., முன்னாள் மாணவர்கள் அறிவிப்பு

ADDED : ஜன 13, 2025 04:11 AM

நெய்வேலி : என்.எல்.சி., பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, அரசு மருத்துவ கல்லுாரிகளில் இடம் பெறுபவர்களுக்கு ஆண்டுதோறும் அப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவ, மாணவிகள் கல்வித் தொகையை வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 10ல் உள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் வட்டம் 11ல் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1984--86ம் ஆண்டு பயின்ற மாணவ, மாணவிகள் சார்பில் நேற்று ஆண்டு பேரவை கூட்டம் நடந்தது.
நெய்வேலி எஜுகேஷன் வெல்பீயிங் சொசைட்டியின் தலைவர் சரவணன் தலைமை தாங்கினார்.
செயலாளர் மணிகண்டன், பொருளாளர் ரமேஷ், நிர்வாக செயலாளர் சுரேஷ் முன்னிலை வகித்தனர். ஸ்டாலின் வரவேற்றார்.
சொசைட்டியின் துணை தலைவர் ராம்குமார் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி கவுரவித்தார். என்.எல்.சி., பள்ளியின் முன்னாள் ஆசிரியர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
என்.எல்.சி., பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவ மாணவிகளுக்கு அவார்டு வழங்குவது, என்.எல்.சி.,பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நீட் தேர்வில் அரசு மருத்துவக் கல்லுாரியில் இடம்பெறுபவர்களுக்கு ஆண்டு தோறும் அவர்களின் கல்வித் கட்டணத்தை, சொசைட்டியே செலுத்துவது மற்றும் என்.எல்.சி., தமிழ் வழி கல்வி மாணவர்களுக்கு இலவசமாக மருத்துவ நீட் தேர்வுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பயிற்சி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் அறிவிக்கப்பட்டது.
ஆண்டறிக்கையை பொரு ளாளர் ரமேஷ் வாசித்தார். திருஅரசு தொகுத்து வழங்கினார்.