/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
என்.எல்.சி., அண்ணா தொழிற்சங்க தேர்தல் 43 பதவிகளுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு
/
என்.எல்.சி., அண்ணா தொழிற்சங்க தேர்தல் 43 பதவிகளுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு
என்.எல்.சி., அண்ணா தொழிற்சங்க தேர்தல் 43 பதவிகளுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு
என்.எல்.சி., அண்ணா தொழிற்சங்க தேர்தல் 43 பதவிகளுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு
ADDED : ஜன 11, 2025 04:57 AM

கடலுார்: நெய்வேலியில் நடந்த என்.எல்.சி., அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்க தேர்தலில் 43 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
பழனிசாமி அறிவிப்பின்படி, நெய்வேலி என்.எல்.சி., அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்க தேர்தல் 12 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது. இந்த தேர்தலுக்கு ஆணையாளராக முன்னாள் அமைச்சர் செம்மலை, தேர்தல் பொறுப்பாளர்களாக தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்துார் ராஜேந்திரன், மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழி தேவன், அண்ணா தொழிற்சங்க மாநில பேரவை செயலாளர் கமலக்கண்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர்.
என்.எல்.சி., சுரங்க அனல் மின் நிலைய மருத்துவமனை, நகர நிர்வாகம் என ஒன்பது இடங்களில் ஓட்டுச்சாவடி மையம் அமைக்கப்பட்டு, அண்ணா தொழிற்சங்க தொழிலாளர்கள் ஓட்டு போட்டனர்.
அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கத்தில் தலைமை பொறுப்பாளர்களான தலைவர், செயலாளர், பொருளாளர், அலுவலக செயலாளர் ஆகிய நான்கு தலைமை பொறுப்பாளர் பதவிகள் உட்பட மொத்தம் 43 பதவிகளுக்கான தேர்தல் நடந்தது. பதிவான ஓட்டுகள் மாலை ஆறு மணிக்குமேல் எண்ணப்பட்டன. இதில் இதில் தலைவராக பாரதிதாசன், செயலாளராக வெற்றிவேல், பொருளாளராக அமுல்ராஜ், அலுவலக செயலாளராக ஜாகிர் உசேன் மற்றும் 14 துணைத்தலைவர்களும், 25 பகுதி செயலாளர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த தேர்தலில் ஓட்டுச் சாவடி பொறுப்பாளர்களாக முன்னாள் எம்.எல்.ஏ., சிவசுப்ரமணியன், முருகுமணி, அருளழகன், வழக்கறிஞர் ராஜசேகர், வடக்குத்து கோவிந்தராஜ், பாஷ்யம், ராதாகிருஷ்ணன், வினோத், பண்ருட்டி கமலக்கண்ணன், குறிஞ்சிப்பாடி ஆனந்தபாஸ்கரன், சுப்பிரமணியன், முத்துலிங்கம், ஞானசெல்வி கல்யாணசுந்தரம் உட்பட பலர் பணியாற்றினார்.