/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேலை வாங்கி தருவதாக மோசடி என்.எல்.சி., ஊழியருக்கு வலை
/
வேலை வாங்கி தருவதாக மோசடி என்.எல்.சி., ஊழியருக்கு வலை
வேலை வாங்கி தருவதாக மோசடி என்.எல்.சி., ஊழியருக்கு வலை
வேலை வாங்கி தருவதாக மோசடி என்.எல்.சி., ஊழியருக்கு வலை
ADDED : ஏப் 17, 2025 06:39 AM
பண்ருட்டி : என்.எல்.சி., யில் வேலைவாங்கி தருவதாக கூறி மோசடி செய்த ஒப்பந்த ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அடுத்த மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் பிரவீன், 24; இவருக்கு தன் நண்பர் மூலமாக என்.எல்.சி., யில் கடந்த 18 ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்த பண்ருட்டி அடுத்த பூண்டி குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த ராஜ்மோகன்,42; என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இவர், என்.எல்.சி.,யில் அதிகாரிகள் பலரை தெரியும் எனவும், வேலை வாங்கித் தருவதாகவும் பிரவீனிடம் ஆசை வார்த்தை கூறினார். இதனை நம்பி பிரவீன் கடந்த 2023 ஆக., 2 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் கொடுத்தார்.
பணத்தை பெற்றதும் ராஜ்மோகன் வேலை வாங்கித் தராமல் காலம் கடத்தினார். பணத்தை திருப்பிக் கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில், புதுப்பேட்டை போலீசார் நேற்று வழக்குப் பதிந்து ராஜ்மோகனை தேடி வருகின்றனர்.