/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
என்.எல்.சி., ஊழியர் துாக்கிட்டு தற்கொலை
/
என்.எல்.சி., ஊழியர் துாக்கிட்டு தற்கொலை
ADDED : ஜன 31, 2024 07:29 AM

நெய்வேலி : என்.எல்.சி., ஊழியர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 10 ஐ சேர்ந்தவர் சேகர்.56; என்.எல்.சி., இரண்டாம் சுரங்கத்தில் எஸ்.எம்.இ., ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். இவர், நண்பர்கள் பலருக்கும் சீட்டு மற்றும் கடன் வாங்குவதற்கு ஜாமின் போட்டுள்ளார். அவர்கள் பணம் கட்டாததால், சேகரின் சம்பளத்தில் பணம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் சேகர் வேலைக்கு போனாலும் சம்பளம் கைக்கு வரவில்லை. கடன் பிரச்னையும் இருந்துள்ளது.
இதனால் மனமுடைந்த சேகர் நேற்று மாலை தனது வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார், இவருக்கு ராணி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இதுகுறித்து டவுன்ஷிப் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.