ADDED : நவ 21, 2025 05:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெய்வேலி: என்.எல்.சி. ஊழியர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நெய்வேலி டவுன்ஷிப் வட்டம், 25ஐ சேர்ந்தவர் முனுசாமி. 54; இவரது மனைவி சிவகாமி. 48; இவர்களுக்கு ஜெகன் என்ற மகனும் புவனேஸ்வரி என்ற மகளும் உள்ளனர்.
முனுசாமி என்.எல்.சி., இரண்டாம் சுரங்கத்தில் நிரந்தர ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் உடல்நலம் சரியில்லாத காரணத்தால் நேற்று மதியம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்துக்கு வந்த டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் பிரேதத்தை மீட்டு என்.எல்.சி., மருத்துவமணைக்கு கொண்டு சென்றனர்.
மேலும் முனுசாமி சாவுக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

