/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
என்.எல்.சி., இன்ஜினியர் கார் மோதி பலி
/
என்.எல்.சி., இன்ஜினியர் கார் மோதி பலி
ADDED : பிப் 16, 2024 07:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெய்வேலி : நெய்வேலி டவுன்ஷிப், வட்டம் 13யை சேர்ந்தவர் பழனி,46; என்.எல்.சி., முதல் சுரங்கத்தில் எலக்டிரிக்கல் பிரிவில் இன்ஜினியராக பணியாற்றி வந்த இவர், நேற்று மாலை 4:15 மணிக்கு, வட்டம் 18ல் உள்ள ஓ.பி.சி., நலச்சங்கம் அருகில் பைக்கில் சென்றபோது, பின்னால் வந்த கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
விபத்தில் படுகாயமடைந்த பழனியை அங்கிருந்தவர்கள் மீட்டு என்.எல்.சி., மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தார்.
இதுகுறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இறந்த பழனிக்கு, சாந்தி, 40; என்ற மனைவியும், 2 மகன்கள், 1 மகள் உள்ளனர்.