/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
என்.எல்.சி., விரிவாக்க பணி: சேத்தியாத்தோப்பில் தடுத்து நிறுத்தம்
/
என்.எல்.சி., விரிவாக்க பணி: சேத்தியாத்தோப்பில் தடுத்து நிறுத்தம்
என்.எல்.சி., விரிவாக்க பணி: சேத்தியாத்தோப்பில் தடுத்து நிறுத்தம்
என்.எல்.சி., விரிவாக்க பணி: சேத்தியாத்தோப்பில் தடுத்து நிறுத்தம்
ADDED : ஏப் 09, 2025 07:46 AM

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அருகே என்.எல்.சி., இரண்டாவது சுரங்க விரிவாக்க பணியை தடுத்து, கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த மும்முடிசோழகன் கிராமத்தில் நெய்வேலி என்.எல்.சி.,நிர்வாகம் இரண்டாவது சுரங்க விரிவாக்கத்திற்காக மண்வெட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 2002ம் ஆண்டு என்.எல்.சி.,க்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பு, வாழ்வாதாரத் தொகை வழங்க வேண்டும். கடந்த 2007ம் ஆண்டு நிலம் வழங்கிய வளையமாதேவி, கரிவெட்டி, கத்தாழை கிராம மக்களுக்கு 10 லட்சம் ரூபாய் கருணைத் தொகை வழங்கியது போல் தங்களுக்கும் 10 லட்சம் ரூபாய் கருணைத் தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை, மும்முடிசோழகன் கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலை 11:00 மணிக்கு 50க்கு மேற்பட்ேTோர் இரண்டாவது சுரங்க விரிவாக்க மண்வெட்டும் பகுதிக்கு சென்று பணியை தடுத்து நிறுத்தினர். இதனால் பரபரப்பு நிலவியது. அதனைத் தொடர்ந்து, பந்தல் அமைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
என்.எல்.சி., அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, இப்பிரச்னை தொடர்பாக வரும் 16ம் தேதி நெய்வேலி நில எடுப்பு அலுவலகத்தில் கோரிக்கைகள் குறித்து மனு வழங்குமாறு கூறினர். இதனையேற்று கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு மதியம் 2:00 மணிக்கு கலைந்து சென்றனர்.

