/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
என்.எல்.சி., தொழிலாளி சடலம்; கொலையா என போலீஸ் விசாரணை
/
என்.எல்.சி., தொழிலாளி சடலம்; கொலையா என போலீஸ் விசாரணை
என்.எல்.சி., தொழிலாளி சடலம்; கொலையா என போலீஸ் விசாரணை
என்.எல்.சி., தொழிலாளி சடலம்; கொலையா என போலீஸ் விசாரணை
ADDED : டிச 19, 2024 06:54 AM

விருத்தாசலம்; விருத்தாசலம் அருகே அழுகிய நிலையில் என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளி இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கம்மாபுரம் பகுதியில் உள்ள மணிமுக்தாற்றில் நேற்று பகல் 1:00 மணியளவில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்தது.
தகவலறிந்து சென்ற கம்மாபுரம் போலீசார் சடலத்தை கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் கம்மாபுரம் அடுத்த கரிவெட்டி கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம் மகன் அருள்பாண்டியன், 24, என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர் என்பது தெரிய வந்தது.
மேலும், விசாரணையில், கடந்த 14ம் தேதி தனது நண்பர்களுடன் பைக்கில் விருத்தாசலம் சென்றபோது, விருத்தாசலம் போலீசாரால் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால், அருள்பாண்டியனை அவரது நண்பர்கள் பஸ்சில் ஏற்றி விட்டு, வீடு திரும்பியேபோது காணாமல் போனதாக, சேத்தியதோப்பு போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று ஆற்றில் அழுகிய நிலையில் அருள்பாண்டியன் சடலமாக கிடந்ததால், அவர் ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது கொலை செய்யப்பட்டாரா என கம்மாபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.