/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ.1549.10 கோடி லாபம் ஈட்டி என்.எல்.சி., புதிய சாதனை
/
ரூ.1549.10 கோடி லாபம் ஈட்டி என்.எல்.சி., புதிய சாதனை
ரூ.1549.10 கோடி லாபம் ஈட்டி என்.எல்.சி., புதிய சாதனை
ரூ.1549.10 கோடி லாபம் ஈட்டி என்.எல்.சி., புதிய சாதனை
ADDED : அக் 27, 2024 06:22 AM

நெய்வே : என்.எல்.சி., நிறுவனம் நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில், ரூ. 1,549.10 கோடி நிகர லாபம் ஈட்டி புதிய சாதனையை படைத்துள்ளது.
என்.எல்.சி., இயக்குநர்கள் குழுக்கூட்டம் அந்நிறுவன சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி தலைமையில் நடந்தது. கூட்டத்தில், நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களின் உற்பத்தி மற்றும் நிதி நிலை செயல்பாடுகள் அறிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் சேர்மன் பேசுகையில், கடந்த செப்., 30 ம் தேதியுடன் நிறைவடைந்த முதல் அரையாண்டில், பழுப்பு நிலக்கரி உற்பத்தி, 122.37 லட்சம் டன், மின் உற்பத்தி 14,192.18 மில்லியன் யூனிட்டாக எட்டியுள்ளது.
அதில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின் உற்பத்தி அளவான 1,136.08 மில்லியன் யூனிட்டும் அடங்கும்.
நிதி நிலை செயல்பாட்டில், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ. 6,294.02 கோடியாக இருந்த வருவாய், 12 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து ரூ.7,033.32 கோடியாக உயர்ந்துள்ளது. நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ 8, 010.71 கோடி. இது கடந்தாண்டில் ஒப்பிடுகையில் 20 சதவீதம் கூடுதலாகும்.
நிறுவனம் வரிக்கு பிந்தைய லாபமாக ரூ.1,549.10 கோடியை ஈட்டி புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது. கடந்த செப்., 30ம் தேதியில், நிறுவனத்தின் ஒரு பங்கின் சந்தை விலை ரூ 282.50 ஆக இருந்தது. இதுகடந்த நிதியாண்டில் ரூ. 134.95 ஆக இருந்தது. இதன் மூலம், இந்த நிதியாண்டின் முதல் அரையாண்டில் 109 சதவீத வளர்ச்சியை நிறுவனம் பதிவு செய்துள்ளது என்றார்.