/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
என்.எல்.சி., சுரங்க விரிவாக்க பணி கம்மாபுரத்தில் தடுத்து நிறுத்தம்
/
என்.எல்.சி., சுரங்க விரிவாக்க பணி கம்மாபுரத்தில் தடுத்து நிறுத்தம்
என்.எல்.சி., சுரங்க விரிவாக்க பணி கம்மாபுரத்தில் தடுத்து நிறுத்தம்
என்.எல்.சி., சுரங்க விரிவாக்க பணி கம்மாபுரத்தில் தடுத்து நிறுத்தம்
ADDED : மார் 13, 2024 06:59 AM
விருத்தாசலம் : என்.எல்.சி., நிர்வாகம் சுரங்க விரிவாக்க பணியை கிராம மக்கள் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் பகுதியில் உள்ள நிலங்களை, இரண்டாவது சுரங்க விரிவாக்க பணிக்கு, என்.எல்.சி., நிர்வாகம் கையகப்படுத்தி உள்ளது. ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட இடத்திற்கு குறைந்த அளவு இழப்பீடு வழங்கி உள்ளதாகவும், 2000ம் ஆண்டு முதல் கையகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் தற்போது வரை கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு சமமான இழப்பீடு வழங்க வேண்டும். வீட்டிற்கு ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கம்மாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில், முறையான பேச்சு வார்த்தை நடத்தாமல், நேற்று மாலை என்.எல்.சி., நிர்வாகம் கையகப்படுத்தப்பட்ட இடத்தை, இயந்திரம் மூலம் சமன் செய்யும் பணியை துவங்கியது.
இதையறிந்த அப்பகுதி மக்கள், பணியை தடுத்து நிறுத்தி, முற்றுகையிட முயன்றனர். உடன் அதிகாரிகள், இயந்திரங்களை அவசர அவசரமாக சுரங்க பகுதிக்கு எடுத்துச் சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.