/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
என்.எல்.சி., முன் ஆர்ப்பாட்டம்: மா.கம்யூ., தீர்மானம்
/
என்.எல்.சி., முன் ஆர்ப்பாட்டம்: மா.கம்யூ., தீர்மானம்
என்.எல்.சி., முன் ஆர்ப்பாட்டம்: மா.கம்யூ., தீர்மானம்
என்.எல்.சி., முன் ஆர்ப்பாட்டம்: மா.கம்யூ., தீர்மானம்
ADDED : செப் 28, 2024 07:06 AM

சிதம்பரம், : மா.கம்யூ., சார்பில், விவசாய அரங்கில் பணியாற்றும் கட்சி உறுப்பினர்களுக்கான மாவட்ட பயிற்சி முகாம் சிதம்பரத்தில் நடந்தது.
செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் சரவணன் வரவேற்றார்.
மா.கம்யூ., மத்திய குழு உறுப்பினர் வாசுகி, செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன், மாநிலக்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, மாவட்டச் செயலர் மாதவன் உட்பட பலர் பங்கேற்று பேசினர். மாவட்டக் குழு உறுப்பினர் பிரகாஷ் நன்றி கூறினார்.
கூட்டத்தில், கடலுார் மாவட்டத்தில் போலி உரம் விற்பனை தொடர்பாக நடவடிக்கை கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் அக்., 1ம் தேதி கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது.
என்.எல்.சி., நிறுவன சுரங்கப் பணிகளுக்கு கைப்பற்றப்பட்ட விவசாய நிலங்களுக்கு முழுமையான இழப்பீடு, நிலம் வழங்கியோர் குடும்பத்தில் வீட்டுக்கு ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்காத சூழலில், இந்த நிறுவனத்தில் ஏ.எம்.சி., பணிகளுக்காக 150க்கும் மேற்பட்ட வெளிநபர்களை நியமனம் செய்துள்ளதை கண்டித்து அக்., 7ம் தேதி என்.எல்.சி., அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.