/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
என்.எல்.சி., விளையாட்டு பள்ளி மாணவர் கேலோ போட்டியில் பங்கேற்க தேர்வு

ADDED : ஏப் 16, 2025 08:26 PM

மந்தாரக்குப்பம்: என்.எல்.சி., விளையாட்டு பள்ளி மாணவர் கேலோ இந்திய விளையாட்டு போட்டிகளில் விளையாட தேர்வு செய்யப்பட்டார்.
பீகாரில் கேலோ இந்திய விளையாட்டு போட்டி கடந்த 14ம் தேதி துவங்கி, வரும் 30 ம் தேதி வரை நடக்கிறது. முன்னதாக இப்போட்டியில் பங்கேற்க தேசிய அளவிலான தடகள வீரர்கள் தேர்வு உத்திரபிரதேசத்தில் நடந்தது.
இதில், 38 மாநிலங்களில் இருந்து 100 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.
விளையாட்டு வீரர்களின் திறமைக்கு ஏற்ப மதிப்பெண் வழங்கப்பட்டு தமிழ்நாடு அணி சார்பில் 2 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில், ஒருவர் ராணிப்பேட்டையைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர் மனீஷ்குமார்,17; இவர், நெய்வேலி என்.எல்.சி., விளையாட்டு பள்ளி விடுதியில் தங்கி படித்து வருகிறார்.
தடகள போட்டியில் மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் பல சாதனைகளை படைத்து வருகிறார். கேலோ இந்திய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தேர்வான மனீஷ்குமாருக்கு என்.எல்.சி., அதிகாரிகள், தலைமையாசிரியர்கள், பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.