/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
என்.எல்.சி., தொ.மு.ச., புதிய நிர்வாகிகள் அறிமுகம்
/
என்.எல்.சி., தொ.மு.ச., புதிய நிர்வாகிகள் அறிமுகம்
ADDED : ஏப் 07, 2025 05:57 AM

நெய்வேலி : நெய்வேலி டவுன்ஷிப், வட்டம் 25 தொ.மு.ச., வளாகத்தில், என்.எல்.சி.,ஒப்பந்தம் மற்றும் இன்கோசர்வ் சொசைட்டியின் புதிய தொ.மு.ச., நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடந்தது.
மாவட்ட தொ.மு.ச., பேரவை செயலாளர் திருமாவளவன் தலைமை தாங்கினார். என்.எல்.சி.,யின் தொ.மு.ச., பொருளாளர் அய்யப்பன், அலுவலக செயலாளர் ஜெரால்டு முன்னிலை வகித்தனர். பொறுப்புக்குழு தலைவர் ஸ்டாலின் வரவேற்றார்.
தொ.மு.ச., பேரவை இணை பொது செயலாளர் பாரி புதிய பொறுப்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
கூட்டத்தில் முன்னாள் காண்ட்ராக்ட் சங்க செயலாளர் கனக பழனிவேல், செந்தில்குமார் மற்றும் புதிய நிர்வாகிகள் பழனிவேல், அண்ணாதுரை, ஜெகதீசன், சாரதி, சரவணன், முத்துசாமி, பாஸ்கர், சந்திரசேகர், செந்தில், சிவகுமார், ரகு கணேஷ் பங்கேற்றனர்.
ஒப்பந்தம் மற்றும் இன்கோசர்வ் சொசைட்டி தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
இடைக்கால ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

