/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
என்.எல்.சி., தொழிற்சங்கத்தினர் போனஸ் கேட்டு ஆர்ப்பாட்டம்
/
என்.எல்.சி., தொழிற்சங்கத்தினர் போனஸ் கேட்டு ஆர்ப்பாட்டம்
என்.எல்.சி., தொழிற்சங்கத்தினர் போனஸ் கேட்டு ஆர்ப்பாட்டம்
என்.எல்.சி., தொழிற்சங்கத்தினர் போனஸ் கேட்டு ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 16, 2024 08:17 AM

நெய்வேலி : என்.எல்.சி.,யில், ஒப்பந்த மற்றும் சொசைட்டி தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் கேட்டு, பாட்டாளி தொழிற்சங்கத்தினர் கொட்டும் மழையில் கருப்புக்கொடியேந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
என்.எல்.சி., ஒப்பந்த மற்றும் சொசைட்டி தொழிலாளர்களுக்கு 20 சதவீத போன்ஸ் கேட்டு, பல்வேறு தொழிற்சங்கத்தினர் பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாலை, நெய்வேலி டவுன்ஷிப் மெயின் பஜாரில், பாட்டாளி தொழிற்சங்கத்தினர் கருப்பு கொடியேந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். என்.எல்.சி., பாட்டாளி தொழிற்சங்க பொதுச் செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார்.
தலைவர் குமாரசாமி, பொருளாளர் ஆறுமுகம், அலுவலக செயலாளர் முருகவேல் மற்றும் பா.ம.க., நெய்வேலி நகர செயலாளர் சார்லஸ் முன்னிலை வகித்தனர். ஒப்பந்த பாட்டாளி தொழிற்சங்க தலைவர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.
பா.ம.க., வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் பா.ம.க., நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்கத்தினர் மழையில் குடை பிடித்தபடி கருப்புக்கொடியேந்தி கோஷங்கள் எழுப்பினர்.
நெய்வேலி டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் சுதாகர் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.