sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 கந்து வட்டி கேட்டு மிரட்டிய என்.எல்.சி., தொழிலாளி கைது

/

 கந்து வட்டி கேட்டு மிரட்டிய என்.எல்.சி., தொழிலாளி கைது

 கந்து வட்டி கேட்டு மிரட்டிய என்.எல்.சி., தொழிலாளி கைது

 கந்து வட்டி கேட்டு மிரட்டிய என்.எல்.சி., தொழிலாளி கைது


ADDED : நவ 21, 2025 05:37 AM

Google News

ADDED : நவ 21, 2025 05:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெய்வேலி நவ. 21-: கந்து வட்டி கேட்டு மிரட்டிய என்.எல்.சி., தொ ழிலாளியை டவுன்ஷிப் போலீசார் கைது செய்தனர்.

நெய்வேலி டவுன்ஷிப் வட்டம், 24 ஐ சேர்ந்தவர் மரியா ஜோசப். இவரது மனைவி லீமா ரோஸ்லின் ராணி, 50; மரியா ஜோசப், என்.எல்.சி., 2ம் சுரங்கத்தில் நிரந்தர ஊழியராக பணியாற்றி வருகிறார்.

நெய்வேலி டவுன்ஷிப் வட்டம், 5 ஐ சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் செல்வராஜ்.40; இவர் என்.எல்.சி., இன்கோசர்வ் சொசைட்டி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

மரியா ஜோசப் தனது குடும்ப செலவுக்காக செல்வராஜிடம் கடந்த 2001 ம் ஆண்டு 4 லட்சம் மற்றும் 2022ம் ஆண்டு ரூ.1.50 லட்சம் கடனாக பெற்றுக்கொண்டு பூர்த்தி செய்யாத பத்திரங்களை வழங்கியுள்ளார். இந்நிலையில், மரியா ஜோசப் 17 லட்சத்து, 77 ஆயிரத்து 760 ரூபாயை, வட்டியுடன் திருப்பி செலுத்தியுள்ளார். ஆனால் , செல்வராஜ் அந்த பணம் முழுவதையும் வட்டியில் கழித்துக்கொண்டு இன்னும் ரூ. 7 லட்சம் தரவேண்டும் என கேட்டு மரியா ஜோசப்பின் மனைவியை மிரட்டி வந்துள்ளார்.

இதுகுறித்து லீமா ரோஸ்லின் ராணி கொடுத்த புகாரின்பேரில் டவுன்ஷிப் போலீசார் வழக்கு பதிந்து செல்வராஜை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us