ADDED : ஜன 13, 2024 03:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி : பண்ருட்டி அருகே விஷம் குடித்து என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளி இறந்தது குறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பண்ருட்டி அடுத்த எலவத்தடி புதுக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் சிவகண்டன்,38; என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர். இவர், குடும்ப பிரச்னை காரணமாக கடந்த10ம் தேதி பூச்சி மருந்து சாப்பிட்டு மயங்கி விழுந்தார்.
பேர்பெரியான்குப்பம் தனியார் கிளினிக்கில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கிருந்து தப்பி சென்ற அவர், வல்லம் சுடுகாடு அருகே மதுபானம் அருந்திய நிலையில் இறந்துகிடந்தார்.
இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.