/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வடக்கு மாவட்ட பா.ம.க., செயற்குழு
/
வடக்கு மாவட்ட பா.ம.க., செயற்குழு
ADDED : டிச 09, 2025 07:04 AM

கடலுார்: கடலுார் வடக்கு மாவட்ட பா.ம.க., செயற்குழு கூட்டம் காடாம்புலியூரில் நடந்தது.
மாவட்ட செயலாளர் ஜெகன் தலைமை தாங்கினார். கிழக்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல் வரவேற்றார். மூத்த நிர்வாகி கோபாலகி ருஷ்ணன், மாவட்ட நிர்வாகிகள் ஜெயபால், ஏழுமலை, சேகர், வினோத், பாலகுரு, கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர்.
வன்னியர்களுக்கு 10.5 ச தவீ த உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலுாரில் வரும் 12ம் தேதி நடக்கும் ஆர்ப்பாட்டத்தில், வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நெய்வேலி, பண்ருட்டி தொகுதிகளில் இருந்து 5,000த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பது என, கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மகளிர் சங்க நிர்வாகிகள் பரமேஸ்வரி, கலையரசி, வளர்மதி, முத்துராஜ், லோகு, பார்த்திபன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஒன்றிய தலைவர் அன்பு நன் றி கூறினார்.

