ADDED : டிச 20, 2024 04:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் முதுநகர் அருகே மாடியிலிருந்து தவறிவிழுந்த வடமாநில தொழிலாளி உயிரிழந்தார்.
பீகார் மாநிலம், ரோஸ்தாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த பருகர் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜய்சர்மா,23. இவர் கடலுார் சிப்காட்டில் உள்ள தொழிற்சாலையில் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் பணியாற்றி வந்தார்.
கடந்த 17 ம் தேதி இரவு 11.30மணியளவில் தங்கியிருக்கும் அறையின் இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்தார்.
புகாரின் பேரில் கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.