ADDED : நவ 08, 2024 05:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: சென்னை கன்னியாகுமரி தொழிற்தட சாலை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக கடலூரில் இருந்து மடப்பட்டு வரை பணிகள் முடிந்தது.
நெல்லிக்குப்பம் நகரத்தில் சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது. அதன் மீது, கடை வைத்திருந்தவர்கள் ஆக்கிரமித்து கடைகளை விரிவாக்கம் செய்தனர். இதனால் நடந்து செல்ல முடியாமல் மக்கள் அவதியடைந்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் மூலம், ஆக்கிரமிப்புகளை 7 நாட்களுக்குள் அகற்றிக்கொள்ள வேண்டும் என, நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

