/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போலீசை வெட்டி தப்பியோடிய பிரபல கொள்ளையன் சுட்டுப்பிடிப்பு
/
போலீசை வெட்டி தப்பியோடிய பிரபல கொள்ளையன் சுட்டுப்பிடிப்பு
போலீசை வெட்டி தப்பியோடிய பிரபல கொள்ளையன் சுட்டுப்பிடிப்பு
போலீசை வெட்டி தப்பியோடிய பிரபல கொள்ளையன் சுட்டுப்பிடிப்பு
ADDED : மார் 21, 2025 02:32 AM

சிதம்பரம்:போலீசாரை வெட்டி தப்ப முயன்ற பிரபல கொள்ளையனை, போலீசார் சுட்டு பிடித்தனர்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அருகே வல்லம்படுகையை சேர்ந்தவர் கஜேந்திரன், 35; சாப்ட்வேர் ஊழியர். கடந்த, 18ம் தேதி குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். திரும்பி வந்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, 20 சவரன் நகை, 50,000 ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிந்தனர். தனிப்படை போலீசார் கொள்ளை யனை தேடினர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, அண்ணா மலை நகர் மெயின்ரோட்டில், வாகன சோதனையில் சிக்கிய நபர், கஜேந்திரன் வீட்டில் கொள்ளையடித்தது தெரியவந்து, போலீசார் கைது செய்தனர்.
அவர், கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபம் தாலுகாவிற்குட்பட்ட, காட்டுவிள்ளையை சேர்ந்த ஸ்டீபன், 38, என, தெரியவந்தது.
சிதம்பரம் அடுத்துள்ள சித்தலாப்பாடி சாலையோரம் திருடிய நகை மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய தளவாட பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக ஸ்டீபன் கூறியதை தொடர்ந்து, நேற்று காலை, 6:00 மணிக்கு, இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், போலீஸ்காரர் ஞானபிரகாசம் உள்ளிட்டோர் ஸ்டீபனை அங்கு அழைத்து சென்றனர்.
சித்தலாப்பாடி சாலையில் சென்றபோது, ஸ்டீபன் அங்கு மறைத்து வைத்திருந்த கத்தியால் போலீஸ்காரர் ஞானபிகாசத்தை கையில் வெட்டினார். அடுத்து, இன்ஸ்பெக்டரையும் தாக்க முயன்றார்.
சுதாரித்த இன்ஸ்பெக்டர், துப்பாக்கியால் ஸ்டீபன் காலில் சுட்டார். கால் முட்டியில் குண்டு பாய்ந்து ஸ்டீபன் சுருண்டு விழுந்தார்.
அண்ணாமலைநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதே மருத்துவமனையில் போலீஸ்காரரும் சேர்க்கப்பட்டார். கடலுார் எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையில், டி,எஸ்.பி., லாமேக் சம்பவ இடத்தை பார்வையிட்டு, விசாரணை நடத்தினர்.
ஸ்டீபன் மீது தமிழகம் முழுதும் ஒன்பது மாவட்டங்களில், 27 வழிப்பறி மற்றும் குற்ற வழக்குகள் உள்ளன. கேரளாவிலும் கைவரிசை காட்டியுள்ளார் என, எஸ்.பி., ஜெயகுமார் தெரிவித்தார்.