ADDED : அக் 05, 2025 03:22 AM

மந்தாரக்குப்பம், : நெய்வேலி ஜவகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நிறைவு விழா நடந்தது.
நெய்வேலி ஜவகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் வேகாக்கொல்லை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கடந்த வாரம் துவங்கியது.
முகாமில், சுற்றுப்புற து ாய்மை, பெண் கல்வி ஊக்குவித்தல், டெங்கு ஒழிப்பு, புகையிலை எதிர்ப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு, மரக்கன்று நடுதல் உள்ளிட்ட பணிகளை மாணவர்கள் மேற்கொண்டனர்.
முகாம் நிறைவு விழாவில், என்.எல்.சி., துணைப் பொது மேலாளர் அருளழகன் தலைமை தாங்கினார். வடலுார் டி.ஆர்.எம்., சாந்தி பர்னிச்சர் உரிமையாளர் ராஜமாரியப்பன் முன்னிலை வகித்தனர். ஜவகர் பள்ளி முதல்வர் அஸ்வதி வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர் என்.எல்.சி., பொது மேலாளர்கள் கல்பனாதேவி, சுரேஷ்மூர்த்தி ஆகியோர் மாணவர்களுக்கு சான்றிதழ், பரிசு வழங்கினர்.
ஒருங்கிணைப்பாளர் சசிகுமார் நன்றி கூறினார்.