ADDED : செப் 28, 2025 11:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மரக்கன்றுகள் நட்டு வைத்தனர்.
நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் புத்திரன்குப்பம், கச்சிராயர்குப்பம் மற்றும் மலையாண்டர் கோவில் அடிவாரத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை நடத்தினர்.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் அமுதா தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சோமு, மரக்கன்றுகள் நட்டு வைத்தார். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சசிகுமார், உதவி அலுவலர் ஜெய ராமன் செய்திருந்தனர்.