ADDED : அக் 06, 2025 01:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் அட்சயாமந்திர் மேல்நிலைப்பள்ளியில், என்.எஸ்.எஸ்., திட்ட சிறப் பு முகாம் நடந்தது.
பள்ளி தாளாளர் புருஷோத்தமன் தலைமை தாங்கி, என்.எஸ்.எஸ்., திட்ட சிறப்பு முகாமை துவக்கி வைத்தார். முகாமில், துாய்மைப்பணி, மரக்கன்று நடுதல், போதை ஒழிப்பு பேரணி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
முகாமில், திட்ட அலுவலர் சிவானந்தம், உதவி திட்ட அலுவலர் லட்சுமி நாராயணன், ஆசிரியர் சக்திதாசன் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.