sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாவட்டத்தில் ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை... அதிகரிப்பு: வாக்காளர்கள் 1500 லிருந்து 1200 ஆக குறைப்பு

/

மாவட்டத்தில் ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை... அதிகரிப்பு: வாக்காளர்கள் 1500 லிருந்து 1200 ஆக குறைப்பு

மாவட்டத்தில் ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை... அதிகரிப்பு: வாக்காளர்கள் 1500 லிருந்து 1200 ஆக குறைப்பு

மாவட்டத்தில் ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை... அதிகரிப்பு: வாக்காளர்கள் 1500 லிருந்து 1200 ஆக குறைப்பு


ADDED : அக் 09, 2025 02:13 AM

Google News

ADDED : அக் 09, 2025 02:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் ஒவ்வொரு ஓட்டுச்சாவடிகளிலும் ஏற்கனவே 1500 வாக்காளர்கள் இருந்ததை 1200 குறைத்து பகுப்பாய்வு செய்ததினால் 277 ஓட்டுச்சாவடிகள் கூடுதலாகியுள்ளன.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கடலுார் மாவட்டத்தில் 01.01.2026 -ஐ தகுதி நாளாக கொண்டும், 2002 வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கொண்டும், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் தொடர்பான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதன்படி கணக்கெடுப்பு படிவம் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களால் 26.09.2025 தேதி முதல் வீடு வீடாக சென்று வழங்கப்படவுள்ளது.

இதன் ஒரு பகுதியாக 2002 வாக்காளர் பட்டியல் மற்றும் 06.01.2025ல் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் ஒப்பிடும் பணி ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் நடந்து வருகிறது.

தேர்தல் ஆணையத்தால் 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடி மையங்களை பிரித்தல் மற்றும் முன்னரே அமைந்துள்ள ஓட்டுச்சாவடிகள் தேவையின் அடிப்படையில் இடமாற்றம், கட்டட மாற்றம் மற்றும் பெயர் மாற்றம் செய்ய வேண்டிய நிலை இருப்பின் அதற்கேற்றவாறு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், ஓட்டுச்சாவடி மையங்களை மறுசீரமைப்பு செய்ய அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசியல் கட்சியினர், பொதுமக்கள் குடியிருப்போர் நல சங்கம், பொது நல அமைப்புகள் ஆகியோரிடம் ஓட்டுச்சாவடிகள் அமைவிடங்கள் குறித்த கருத்துகள் பெற்று சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களால் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு 9 சட்டமன்ற தொகுதிகளிலிருந்து ஓட்டுச்சாவடி மறுசீரமைப்பு முன்மொழிவுகள் பெறப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் கடலுார் மாவட்டத்தில் ஓட்டுச்சாவடி மையங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி திட்டக்குடி(தனி) ஏற்கனவே இருந்த 248 ஓட்டுச்சாவடிகளில் தற்போது பகுப்பாய்வு பின் 279 ஓட்டுச்சாவடிகளாகவும், விருத்தாச்சலம் 288 லிருந்து 317 ஓட்டுச்சாவடிகளாகவும், நெய்வேலி 234 லிருந்து 256 ஓட்டுச்சாவடிகளாகவும், பண்ருட்டி 259 லிருந்து 309 ஓட்டுச்சாவடிகளாகவும், கடலுார் 227 லிருந்து 258 ஓட்டுச்சாவடிகளாகவும், குறிஞ்சிப்பாடி 259 லிருந்து 278 ஓட்டுச்சாவடிகளாகவும், புவனகிரி 283லிருந்து 304 ஓட்டுச்சாவடிகளாகவும், சிதம்பரம் 260 லிருந்து 298 ஓட்டுச்சாவடிகளாகவும் , காட்டுமன்னார்கோயில் (தனி) 255 லிருந்து 291 ஓட்டுச்சாவடிகள் என மொத்தம் 2313 ஓட்டுச்சாவடிகளிலிருந்து 277 ஓட்டுச்சாவடிகள் கூடுதலாகி 2590 ஓட்டுச்சாவடிகளாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக விருத்தாசலம் தொகுதியில் 317 ஓட்டுச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பண்ருட்டியிலும் 309 ஓட்டுச் சாவடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்த பகுப்பாய்வின் காரணமாக வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட வேண்டிய அவசியம் பெரும்பாலும் ஏற்படாது. வாக்காளர்கள் விரைவில் ஓட்டளித்து முடித்துவிட வாய்ப்பாக அமையும்.






      Dinamalar
      Follow us