/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சட்ட விரோத கருக்கலைப்பு விவகாரம் செவிலியர், மருந்தாளுனர் ' சஸ்பெண்ட்'

ADDED : ஜூலை 24, 2025 04:00 AM
கடலுார்: கடலுார் நர்சிங் இன்ஸ்டியூட்டில் சட்ட விரோதமாக கருக்கலைப்பில் ஈடுபட்ட விவகாரத்தில், நர்ஸ் மற்றும் மருந்தாளுனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
கடலுார் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் சிவகுருநாதன், இவரது மனைவி உமாமகேஸ்வரி. எஸ்.ஐ.டி., நர்சிங் இன்ஸ்டிடியூட் என்ற பெயரில் நர்சிங் கல்லுாரி நடத்தினர். இங்கு, சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்ததாக புகார் செய்யப்பட்டது. அதையடுத்து, கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கருக்கலைப்பில் ஈடுபட்டதாக சிவகுருநாதன், உமாமகேஸ்வரி, அபியால், தங்கம், மூர்த்தி, வீரமணி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் அபியால் காரைக்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாகவும், தங்கம் அதே சுகாதார நிலையத்தில் மருந்தாளுநராகவும் பணியாற்றி வந்தனர். அவர்கள் இருவர் மீது ஒழுங்கு நடவடிக்கையாக சஸ்பெண்ட் செய்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பொற்கொடி உத்தரவிட்டார்.