நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்: தனியார் மருத்துவம னை செவிலியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரியைச் சேர்ந்த அர்ஜுனன் மகள் புவனேஸ்வரி, 22; சென்னை தண்டையார்பேட்டை தனியார் மருத்துவமனையில் 4 ஆண்டுகளாக செவிலியராக பணிபுரிந்தார். நேற்று முன்தினம் இரவு பெ.பொன்னேரி வந்தார். நேற்று புவனேஸ்வரி வீட்டில் தனது துப்பட்டாவால் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புகாரின்பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.