ADDED : ஜன 31, 2026 06:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை நகரில், கடலுார் மாவட்ட அரசு மருத்துவக்கல்லுாரி மற்றும் மருத்துவமனை இயங்கி வருகிறது.
இந்த மருத்துவ கல்லுாரியில் பல செவிலியர்களுக்கு மீண்டும், மீண்டும் இரவுப்பணி வழங்கக் கூடாது; அனைத்து செவிலியர்களுக்கும் இரவு பணி வழங்க வேண்டும்; என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
ஆனாலும் மீண்டும் அதே நிலை தொடர்வதை கண்டித்து, நேற்று செவிலியர்கள், 50 க்கும் மேற்பட்டோர், கருப்பு பேட்ச் அணிந்து திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவக் கல்லுாரி முன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தில், தொடர்ச்சியான இரவு பணிகொடுப்பதை கண்டித்து பேசப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

